துபாய்: துபாயின் சில்லறை வியா பாரம் கடல் வரை விரிவடைந்துள் ளது. மத்திய கிழக்கில் கார்ஃபோர் கடைகளை நடத்தும் மஜித் அல் ஃபியூட்டெய்ம் ஹோல்டிங்ஸ், கடலில் மிதக்கும் பேரங்காடியைத் தொடங்கியுள்ளது. கடலில் பாய்மர படகு, உல்லாச படகு, ஜெட் படகு போன்றவற்றில் பயணம் செய்யும் வாடிக்கை யாளர் களை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேரங்காடி ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறியது. மிதக்கும் பேரங்காடியில் 300க்கு மேற்பட்ட பொருட்கள் விற்கப்படும். நொறுவைகள், உணவுப்பொருட்கள், சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் மருந்து வகைகள் உட்பட பல தரப் பட்ட பொருட்கள் விற்பனைக்கு இருக்கும் என்று கார்ஃபோர் நிர்வாகம் குறிப்பிட்டது.
துபாய் கடலில் மிதக்கும் பேரங்காடி தொடங்கப்பட்டுள்ளது. படம்: கார்ஃபோர் ஃபேஸ்புக்

