‘சீனாவுக்கு கெடு: மார்ச் 1’

வா‌ஷிங்டன்: சீனாவுக்கு அமெரிக்கா இறுதி கெடு விதித் துள்ளது. "அமெரிக்க-சீன வர்த்தக பூசல் மார்ச் 1ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தை மூலம் வெற்றிகரமாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் புதிய வரிகள் அமலாக்கப்படும்," என்று அமெரிக்காவின் வர்த்தக பிரதி நிதியாளர் ராபர்ட் லைட்டிசர் நேற்று எச்சரித்தார். "இது ஒரு கடினமான கெடு," என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் இரு பெரிய பொரு ளியல் நாடுகளுக்கு இடையே வர்த்தகப் பூசல் தொடர்ந்து நிலவு வதால் உலக சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தகத்தில் சீனா அதிக பலன் அடைந்து வருகிறது.

மேலும் தங்களுடைய அறி வார்ந்த சொத்துகளையும் தொழில் நுட்பங்களையும் சீனா திருடு வதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் பேசிய ராபர்ட் லைட்டிசர், அதிபருடன் பேசிய போது மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு கெடுவை நீட்டிக்க அவர் மறுப்பதா கவும் அவர் கூறினார். அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு புதிய வரிகள் விதிப்பதை அதிபர் டிரம்ப் ஒத்தி வைத்ததை அவர் சுட்டிக் காட்டினார். இதனால் 90 நாட்களின் முடி வில் வரி உயர்வு அமலுக்கு வரும் என்று வலியுறுத்திய லைட்டிசர், பேச்சுவார்த்தைக்கு கால அவ காசம் நீட்டிக்கப்படும் சாத்திய முள்ளதாகவும் தெரிவித்தார்.

மேல் விவரம்: epaper.tamilmurasu.com.sg

காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் அதிபர் டிரம்ப்புக்கு இல்லை என்று திரு ராபர்ட் லைட்டிசர் தெரிவித்தார். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!