கோயில் கலவரம்: நால்வர் விடுவிப்பு

கோயில் கலவரம்: நால்வர் விடுவிப்பு

1 mins read
eb6df898-6181-44d9-8f29-e4c256fe2969
-

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சுபாங் ஜெயாவில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரத்தின்போது தீ அணைப் பாளர் தாக்கப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரை விடுவிக்க நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரை 2,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கவும் மற்ற இருவர் காவல்துறை பிணையில் விடுவிக்கவும் நீதிபதி நூர் ஷாஹிரா அப்துல் சலிம் அனுமதி யளித்தார். கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் இதுவரை விசாரணைக் காவலில் வைக்கப் பட்டிருந்தனர். நீதிமன்றத்தில் சந்தேக நபர் களை வழக்கறிஞர் ஸ்ரீதரன் பிரதி நிதித்தார். கடந்த நவம்பர் 27ஆம் நடந்த கலவரத்தில் தீ அணைப்பாளர் முஹமட் அபிட் முஹமட் காசிம் படுகாயம் அடைந்தார். இவரும் இவரது சகாக்களும் கோயில் முன்பு தீப்பற்றி எரிந்த வாகனத்தை அணைக்கும் முயற் சியில் ஈடுபட்டனர்.

தீ அணைப்பாளர் தாக்கப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரை விடுவிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பெர்னாமா படம்: இணையம்