மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் கைது

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் கைது

1 mins read

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்த குற்றத்துக்காக நேற்று ஊழல் தடுப்பு ஆணையத் தலை மையகத் தில் (எம்ஏசிசி) கைது செய்யப் பட்டார். இந்த விவகாரம் தொடர்பில் நேற்று காலை 10.42 மணிக்கு தலைமையகத்திற்கு வந்தவுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் திரு நஜிப் கைது செய்யப்- பட்டதாக எம்ஏசிசி உயர் அதிகாரி ஒருவர் மலேசிய ஊட கங்களிடம் தெரிவித்தார். பிரதமர் பதவியில் தமக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்- படுத்தி 1எம்டிபி கணக்கு தணிக் கை அறிக்கையில் தலையிட்டு சட்டவிரோதமாக அதில் சில மாற்- றங்களைச் செய்ததன் தொடர்பில் திரு நஜிப் மீது நாளை கோலா- லம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட் டப்படும் என எம்ஏசிசி வட்டாரங்கள் தெரிவித்ததை மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. மேல் விவரம்: epaper.tamilmurasu.com.sg