லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே பிரஸ்சல்சுக்குச் சென்று தமது 'பிரக்சிட்' உடன் பாடு குறித்து அங்குள்ள ஐரோப்பிய தலைவர்களையும் அதி காரிகளையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ள இவ்வேளையில் தம் தலைமைத்துவத்துக்கே பெரும் சவாலை இப்போது எதிர் நோக் குகிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக பிரதமர் மே தயாரித்துள்ள 'பிரக்சிட்' திட்டத்திற்கு நாடாளு மன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை வாக்களித்தனர். இதில் பெரும்பாலான வாக் குகளைப் பெறுவதே பிரதமர் மேயின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும். இருப்பினும் வாக்குகள் அவர் பக்கம் விழும் வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமராக இருந்தாலும் 'பிரக்சிட்' தொடர்பாக அவரிடம் ஒப்பந்தங்களை முடிக்கும் ஆற்றல் உள்ளதா என்பதைக் குறித்த ஐயப் பாடு உள்ளது என்றும் கூறப் படுகிறது.
ஊசலாடும் தெரேசா மேயின் அரசியல் வாழ்வு
1 mins read

