சௌ பௌலோ: பிரேசிலின் கேம்பினாஸ் நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்த துப் பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்ததுடன் நால்வர் படு காயங்கள் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தேவாலயத்தில் வழிபாடு செ ய் து கொ ண் டி ரு ந் தோ ர் இடையே அமர்ந்திருந்த 49 வயது யுலெ ஃபெர்னாண்டோ கேண்டொல்ஃபோ திடீரென எழுந்து சரமாரியாகப் பலரையும் சுடத் தொடங்கினார் என்றும் பின்னர் துப்பாக்கிச் சூட்டு சத்தத்தைக் கேட்டு விரைந்து வந்த போலிசாரையும் நோக்கிச் சுட்டபடி தம்மைத் தாமே தலையில் சுட்டுக்கொண்டார் என்றும் கூறப் பட்டது.
பிரேசிலில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு மக்கள் அவ்விடத்தில் இறந்தோருக்காக மலர்க்கொத்து வைக்கிறார்கள். படம்: இபிஏ

