குற்றச்சாட்டுகளை மறுக்கும் நஜிப், அருள் கந்தா

குற்றச்சாட்டுகளை மறுக்கும் நஜிப், அருள் கந்தா

1 mins read

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், மலேசிய அரசாங்க நிறுவனமான 1எம்டிபி குழுமத்தின் முன்னாள் தலைவர் அருள் கந்தா கந்தசாமி ஆகிய இருவரும் 1எம்டிபி இறுதித் தணிக்கை அறிக்கையைத் திருத் தியதன் தொடர்பிலான குற்றச் சாட்டுகளை நேற்று காலை மறுத் தனர். இதன் தொடர்பில் பிரதமர் பதவியைப் பயன்படுத்தி 1எம்டிபி கணக்கு தணிக்கை அறிக்கையில் தலையிட்டுச் சட்டவிரோதமாக அதில் மாற்றங்கள் செய்ததன் தொடர்பிலான குற்றச்சாட்டை 65 வயது நஜிப் மறுத்தார். எதிர்காலத்தில் தம் மீது சிவில் அல்லது குற்றவியல் வழக்கு தொடுக்கப்படுவதைத் தவிர்க்கவே அறிக்கையில் சில பகுதிகளை நீக்கிவிடுமாறு தலைமைக் கணக் குத் தணிக்கையாளரிடம் உத்தரவு இட்டார் எனக் கூறப்பட்டது. இவ்விவகாரத்தில் நஜிப்புக்கு உடந்தையாக இருந்த குற்றச் சாட்டை 42 வயது அருள் கந்தா மறுத்துள்ளார். இதன் தொடர்பில் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு உள் ளனர்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg