கனடாவைப் பழிவாங்கும் சீனா

ஒட்டாவா: கனடாவில் சீனாவைச் சேர்ந்த கைத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஹுவா வெய் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோவ் கைது செய்யப் பட்டதால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனா எச்சரித்திருந்தது. அதன்படியே சீனாவில் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை சீனா தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இதனை சீன அரசாங்கமும் நேற்று உறுதிப்படுத்தியது. முன்னதாக சீனாவில் இரண் டாவது கனடியர் ஒருவர் காணாமல் போனதாக கனடாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. வடகொரியா எல்லையோர முள்ள டன்டோங்கில் இருந்த தொழிலதிபர் மைக்கல் ஸ்பாவரு டன் தொடர்பு கொள்ள முடிய வில்லை என்று கூறிய கனடா, சீனா அவரை தடுத்து வைத்திருக் கலாம் என்று குறிப்பிட்டது.

திரு ஸ்பாவரின் இருப் பிடத்தைக் கண்டுபிடிக்க கடின மாக செயல்பட்டு வருகிறோம் என்றும் கனடிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கிலாவ்மே பெருபே குறிப்பிட்டார். முன்னதாக இவ்வாரம் சீனா வில் கனடாவைச் சேர்ந்த முன் னாள் தூதர் மைக்கல் கோவ்ரிக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கனடாவின் தொழிலதிபர் மைக்கல் ஸ்பாவரும் தற்போது காணாமல் போயுள்ளார். திரு கோவ்ரிக் கைது செய்யப் பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

ஆனால் சீனாவின் பாது காப்புக்குக் கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சந்தேகத் தின் பேரில் திரு கோவ்ரிக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அனைத்துலக நெருக்கடி கால ஆய்வு நிலையத்தில் திரு கோவ் ரிக் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரிலாண்ட், சீன அதிகாரிகளிடம் கோவ்ரிக் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். "இரண்டாவது கனடியர் ஒருவர் எங்களுடன் தொடர்பு கொண்டு தாம் சீன அதிகாரிகளால் விசாரிக்கப்படுவதாகக் கூறினார்," என்றார் அவர். முதலில் அடை யாளம் தெரியக்கூடாது என் பதற்காக தொழிலதிபர் ஸ்பாவரின் பெயரை கனடா வெளியிட வில்லை. பின்னர் காணாமல் போயிருப் பதாகக் கூறி அவரது பெயரை கனடிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!