‘சிங்கப்பூர்-மலேசியா உறவு சுமுகமாக இருக்க வேண்டும்’

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் இடையிலான ஆகாயவெளி மற்றும் கடல் எல்லை சர்ச்சை களுக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்பட்டு இரு நாட்டு உறவு வழக்க நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று ஜோகூர் மாநில பட்டத்து இளவரசர் துங்கு இஸ் மாயில் இப்ராஹிம் தெரிவித்துள் ளார். “இரு நாடுகளும் தற்போது நிலவும் சர்ச்சைகளுக்கு இரு தரப்பும் நன்மை அடையும் வகையில் தீர்வுகள் காணப்பட வேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் இரு நாடுகளும் சிக்கிக்கொள்ளக் கூடாது,” என்று தமது விருப்பத்தை 34 வயது துங்கு இஸ்மாயில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவு செய்தார். அந்தப் பதிவுடன் பட்டத்து இளவரசர் சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த தமது நெருங்கிய நண்பர்களுடன் கைகளை ஒன்றிணைத்து காட் டும் படத்தையும் பதிவேற்றம் செய்தார்.

“எனது வலப்பக்கத்தில் இருப்பவர் சிங்கப்பூர் சிறப்பு காவற்படையின் பிரேம் சிங். அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக எனக்குப் பாதுகாப்பு வழங்கி வருகிறார். “எனது இடப்பக்கத்தில் இருப்பவர் மலேசிய சிறப்பு காவற்படையின் டெஃப்டினெண்ட் கர் னல் சம்சியாவால் முகம்மது. அவர் கடந்த 2002ஆம் ஆண்டு நான் மலேசிய ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டபோது எனது சக பயிற்சி வீரராக இருந்தார். அவரும் கடந்த மூன்று ஆண்டு களாக என்னைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார். “எனது சிங்கப்பூர், மலேசிய நண்பர்களுக்கு நடுவே நான் நிற்கிறேன். நாங்கள் ஒன்றாகப் பணியாற்றுகிறோம்,” என்று எழுதியிருந்தார்.

ஜோகூர் மாநிலத்தின் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் இப்ராஹிமுடன் (நடுவில்) அவரது நெருங்கிய நண்பர்களான சிங்கப்பூரைச் சேர்ந்த திரு பிரேம் சிங்கும் (இடது) மலேசியாவின் சம்சியாவால் முகம்மதும் கைகளை இணைத்து நிற்கின்றனர். படம்: ஜோகூர் பட்டத்துக்கு இளவரசர் ஃபேஸ்புக்