பிரெக்சிட் உடன்பாட்டில் இனி மாற்றம் இருக்காது

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளி யேறுவது தொடர்பில் ஏற்கெனவே காணப்பட்ட உடன்பாட்டில் இனி எந்த மாற்றமும் இருக்காது என்றும் புதிதாக சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்த உடன்பாடு ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு உதவும் வகையில் அயர்லாந்து பிரச்சினைக்குத் தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியம் சட்ட ரீதியில் சில உத்தரவாதங்களை அளிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கேட்டுக்கொண்டிருந்த வேளையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

அந்த உடன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவலைகளைத் தீர்க்க முடிய வில்லை என்றால் உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று பிரதமர் மே கூறினார். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜூன் கிளாவ்ட் ஜங்கர், பிரெக்சிட் உடன்பாடு குறித்து விளக்கம் அளிக்க முடியுமே தவிர அது குறித்து மீண்டும் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்து பிரிட்டன் என்ன விரும்புகிறது என்பது பற்றி தெளிவாக ஐரோப்பிய ஒன்றியத் திடம் கூற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!