மெக்சிகோ எல்லையைக் கடந்த 7 வயது சிறுமி மரணம்

வா‌ஷிங்டன்: குவாட்டமாலாவைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி தன் தந்தையுடன் சட்டவிரோதமாக அமெரிக்க-மெக்சிகோ எல்லையைக் கடந்தபோது இருவரும் பிடிபட்டனர். அதனைத் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்ட அச்சிறுமி சில மணி நேரங்களில் மரணம் அடைந்ததாக வா‌ஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் சிறுமி பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாலும் தண்ணீர் குடிக்காமல் இருந்ததாலும் கடுமையான உடல் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக சிறுமி மரணம் அடைந்ததாகதாக எல்லைக் காவல் அதிகாரிகள் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஏழ்மை, வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குவாட்டமாலா, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைக் கடக்க முயற்சி செய்கின்றனர். அவர்களில் பலர் அமெரிக்காவில் குடியேற விரும்புகின்றனர்.