அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 40,000 பேர்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் சென்ற ஆண்டு மட்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் கிட்டத்தட்ட 40,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமானது என்று புள்ளிவிவர புதிய ஆய்வு அறிக்கை கூறியது. 1999ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 2017ஆம் ஆண்டில் துப்பாக்கியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 அதிகம் என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு 23,854 பேர் துப்பாக்கியால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக ஆய்வு கூறியது. துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் நடப்பது அமெரிக்காவில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

மேலும் செய்திகள்