கோலாலம்பூர்: மலேசியாவின் திரெங்கானு மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங் களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. வீடுகளைச் சுற்றிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக தாழ்வான பகுதி களில் வசிக்கும் மக்கள் பாதிக் கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு கருதி பலர் அவர்களின் வீடுகைளவிட்டு வெளியேறி யிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். வீடுகளைவிட்டு வெளி யேறிய மக்கள் தங்குவதற்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் இந்த முகாம்களில் சுமார் 163 பேர் தங்கியுள்ளதாகவும் மாநில அதிகாரிகள் கூறினர்.
கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள தால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் இங்குள்ள ஆறுகளில் நீர் மட்ட அளவு உயரக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்கள் மழைக்காலம் என்ப தால் இந்தக் காலக் கட்டத்தில் திரெங்கானு உட்பட பல மாநிலங் களில் கனமழை பெய்து வருகிறது.
திரெங்கானுவில் பல வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. படம்: பெர்னாமா

