ஹாங்காங்: ஹாங்காங் தெருவில் நடந்து சென்றவர்களுக்கு சனிக்கிழமை அதிர்ஷ்டம் காத் திருந்தது. ஆகாயத்திலிருந்து பண நோட்டுகள் கொட்டுவதைப் பார்த்த மக்கள் ஆர்வத்துடன் கைக்கு கிடைத்த நோட்டுகளை எடுத்துக்கொண்டனர். இன்னும் சிலர் அந்த நோட்டுகளை எடுப் பதற்கு சுரங்கப்பாதை வெளியேறும் வழி வரை சென்றதாகக் கூறப் பட்டது. ஹாங்காங்கின் ஃபுக் வா ஸ்திரீட் வழியாக சனிக்கிழமை நடந்துசென்றவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டியது. ஆகாயத் திலிருந்து வங்கி நோட்டுகள் கொட்டுவதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகின. அத்தெருவில் உள்ள உயரமான கட்டடம் ஒன்றி லிருந்து பண நோட்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்பதை அந்த புகைப்படங்கள் உணர்த்தின. கீழே விழுந்த நோட்டுகள் அனைத்தும் 100 ஹாங்காங் டாலர் (S$17.60) நோட்டுகள் என்பது தெரியவந்தது. அத்தகைய 6 நோட்டுகள் ஒருவர் கைக்கு கிடைத்ததாகக் கூறப்பட்டது.
வங்கி நோட்டுகளை ஒரு கட்டடத்தின் உயரத்திலிருந்து வீசுவதாக போலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலிசார், அந்த நோட்டுகளை எடுக்க வேண்டாம் என்று மக்களிடம் கூறியதாக சவுத் சைனா நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டது. அதிகாரிகள் அந்த இடத்தில் 5,000 ஹாங்காங் டாலர் மதிப்பிலான நோட்டுகளை சேகரித்ததாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டது.
ஹாங்காங்கில் ஆகாயத்திலிருந்து பண நோட்டுகள் கொட்டுவதைப் பார்த்த மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த நோட்டுகளை எடுத்துக்கொண்டனர். அந்த நோட்டுகளை கட்டடத்தின் உச்சியிலிருந்து வீசியவர் என்று நம்பப்படும் 24 வயது இளைஞர் இருக்கும் இடத்தைக் கண்டறிய போலிசார் அவரைத் தேடி வருகின்றனர். படம்: ஃபேஸ்புக்

