கம்போடியாவில் மூன்று டன் யானைத் தந்தங்கள் பறிமுதல்

நோம்பென்: ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு சேமிப்பு கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.2 டன் யானைத் தந்தங்களை கம்போடிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கம்போடியாவில் பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங் களில் இதுவே ஆக அதிகமாகும். நோம்பென் துறைமுகத்தில் கடந்த வியாழக்கிழமை 1,026 யானைத் தந்தங்களை அதிகாரி கள் கைப்பற்றியதாகவும் அமெரிக்க தூதரகத்திலிருந்து தங்களுக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சுங்கத்துறை உயர் அதிகாரி கூறினார்.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான யானைத் தந்தங் களை சட்டவிரோதமாக விற்பனை செய்வோர் கம்போடியா வழியாக அவற்றைக் கடத்திச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நோம்பென் துறைமுகத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு கொள்கலனுக்குள் பளிங்குக் கற்களுக்கு இடையே அந்த யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் துறை உயர் அதிகாரி சன் சஹாய் கூறினார்.

கம்போடியாவில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றிய 3.2 டன் யானைத் தந்தங்கள். அந்த யானைத் தந்தங்கள் நோம்பென் துறைமுகத்தில் கைவிடப்பட்ட ஒரு கொள்கலனில் பளிங்குக் கற்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!