காயமுற்ற தீயணைப்புப் படை வீரரின் உடல்நிலை கவலைக்கிடம்

காயமுற்ற தீயணைப்புப் படை வீரரின் உடல்நிலை கவலைக்கிடம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடந்த கலவரத்தில் கடுமையாகக் காயம் அடைந்த தீயணைப்பாளர் முகம்மது அடிப் முகம்மது காசிமின் உடல்நிலை மோசம் அடைந்து வருவதாக தேசிய இதய சிகிச்சை மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் குணமடைந்து வருவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு நுரையீரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள தாகவும் அவரது சிறுநீரகமும் செயல்படவில்லை என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கோயில் கலவரத்தின்போது பலர் முகம்மது அடிப் முகம்மது காசிமைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.