கேளிக்கை மையத்தில் இளைஞர் கொலை

கேளிக்கை மையத்தில் இளைஞர் கொலை

1 mins read

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் நடந்த சண்டையைத் தொடர்ந்து இந்திய ஆடவர் எட்வர்ட் ரிஷால் ரேக்கி என்பவரை ஒரு கும்பல் வெட்டுக் கத்தியால் தாக்கி கொலை செய்ததாக போலிசார் கூறினர். நேற்று காலை அந்த கேளிக்கை மையத்தில் கைகலப்பு நடந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அத்தாக்குதல் தொடர்பில் போலிசார் இதுவரை மூன்று பேரை கைது செய்திருப்பதாகவும் அந்த மூவரும் 20 வயதுக் கும் 31 வயதுக்கும் இடைப் பட்டவர்கள் என்றும் பெட்டாலிங் ஜெயா போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.