'அம்னோ உச்சமன்றம் அவசரமாகக் கூட வேண்டும்'

1 mins read

கோலாலம்பூர்: அம்னோ கட்சியி லிருந்து எம்பிக்கள் 6 பேர் விலகி யதைத் தொடர்ந்து அக்கட்சியின் உச்சமன்றம் அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முன்னாள் அம்னோ துணைத் தலைவர் ஹிசாமுதின் ஹுசேன் கேட்டுக்கொண்டுள்ளார். கட்சியின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க உச்சமன்றம் உடனடியாக அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சாபா அம்னோ பிரிவின் 5 எம்பிக்களும் 9 சட்டமன்ற உறுப்பினர்களும் இரு செனட்டர்களும் அக்கட்சி யிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அம்னோ கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற் பட் டுள்ளது.

தற்போதைய நிலவரம் கவலை அளிப்பதாகவும் இதனால் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் உடனடியாக கூட் டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் ஹிசாமுதின் கேட்டுக்கொண்டார். முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகம்மது அலி ருஸ்டம் அம்னோவிலிருந்து வெளியேறும் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.