சிரியாவில் ஐஎஸ் பயன்படுத்திய பள்ளிவாசல் தகர்ப்பு

சிரியாவில் ஐஎஸ் பயன்படுத்திய பள்ளிவாசல் தகர்ப்பு

1 mins read

வா‌ஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ் போராளிகள், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் மீது தாக்குதல் நடத்த தளமாகப் பயன்படுத்தி வந்த ஒரு பள்ளிவாசலை கூட்டணிப் படை தகர்த்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஹஜின் நகரிலிருந்து ஐஎஸ் போராளிகளை விரட்டியடிக்க அமெரிக்க ஆதரவிலான சிரியாவின் ஜனநாயகப் படை அப்பகுதியில் பல மாதங்களாக ஐஎஸ் போராளிகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. கூட்டணிப் படை மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் குழுவைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய போராளிகள் 16 பேர் அந்த பள்ளிவாசலைப் பயன்படுத்தி வந்ததாக கூட்டணிப் படை தெரிவித்தது. கூட்டணிப் படை நடத்திய தாக்குதலில் போராளிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.