லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து பிரிட்டிஷ் மக்களின் விருப்பத்தை அறிய மேலும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கூறிய கருத்துக்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார். திரு டோனி பிளேரின் கருத்து பிரதமர் அலுவலகத்தை அவமதிக்கும் செயல் என்று திருவாட்டி மே கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை தாங்கள் விரும்புவதாக பிரிட்டிஷ் மக்கள் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்ப்பின்போது தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டனர் என்றும் இதனால் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்படாது என்றும் தற்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் கூறி வருகிறது. பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் காணப்பட்ட உடன்பாட்டிற்கு பிரிட்டிஷ் எம்பிக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தெரேசா மே ஈடுபட்டுள்ளார்.
டோனி பிளேர் கூறிய கருத்துக்கு பிரதமர் தெரேசா மே கண்டனம்
1 mins read

