லண்டன்: 'பிரெக்சிட்' விவகாரத் தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிரிட்டிஷ் மக்கள் நம்பிக்கையிழந்து விடுவார்கள் என்று பிரதமர் மே எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமர்கள் ஜான் மேஜர், டோனி பிளேர் உட்பட பலர் புதிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரு கின்றனர். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் வெளியேறு வதற்கான 'பிரெக்சிட்' திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தால் பொது வாக் கெடுப்புக்கு வழிவகுத்து விடும் என்று அவர் கூறினார்.
மேலும் நாட்டின் அரசியல் மீதான நம்பிக்கை சீர் செய்ய முடி யாத அளவுக்கு பாதிப்புகளை ஏற் படுத்திவிடும் என்றும் பிரதமர் மே குறிப்பிட்டார். கடந்த வாரம் 'பிரெக்சிட்' திட் டத்தை ஆதரித்து வாக்களிக்கு மாறு நாடாளுமன்ற உறுப்பினர் களை அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அது தோல்வியைத் தழுவும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்டதால் கடைசி நிமிடத் தில் வாக்களிப்பை அவர் நிறுத்தி வைத்தார். வரும் 2019 மார்ச் 29ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் வெளியேற விருக்கிறது. இதற்கான திட்டத் தில் பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றி யத்தின் எதிர்கால உறவின் திட் டங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் அங்கீ கரித்தால் மட்டுமே 'பிரெக்சிட்' அமலுக்கு வரும்.
டவ்னிங் ஸ்திரீட்டில் உள்ள வீட்டுக்குத் திரும்பும் பிரதமர் மே. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப 'பிரெக்சிட்' திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். படம்: இபிஏ

