பிலிப்பீன்ஸ் அழகி ‘மிஸ் யுனிவர்ஸ்’

மணிலா: பிலிப்பீன்ஸ் நாட்டின் கேட்ரியோனா கிரே உலக அழகி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள இம்பாக்ட் ஏரினாவில் நடை பெற்ற அழகிப்போட்டியில் அவருக்கு 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் சூட்டப்பட்டது. முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்த தென் ஆப்பிரிக்கா, வெனிசுவேலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகளையும் 91 நாடு களைச் சேர்ந்த அழகிகளையும் பின்னுக்குத் தள்ளி 24 வயது கேட்ரியோனா கிரே முதல் இடத் தைக் கைப்பற்றினார். செல்வி கிரேவுக்கு 2017ஆம் ஆண்டின் உலக அழகியான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி-லீக் நெல்-பீட்டர்ஸ் 'மிஸ் யுனிவர்ஸ்' கிரீடத்தை அணிவித் தார். உலக அழகி நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகரான ஸ்டீவ் ஹார்வேயும் விளம்பர அழகியான ஆஷ்லே கிரஹமும் படைத்தனர். பிலிப்பீன்ஸ் நாடு 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வெல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு மூன்று முறை 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை அது வென்றுள்ளது.

1969ல் குளோரியா டயாஸ், 1973ல் மார்கி மோரன், 2015ல் பியா உர்ட்ஸ்பாக் ஆகியோர் இதற்கு முன்னர் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்றுள்ள அழகிகள் ஆவர்.

பிலிப்பீன்ஸ் அழகி கேட்டிரியோனா கிரேவுக்கு கிரீடம் சூட்டும் 2017ஆம் ஆண்டின் 'மிஸ் யுனிவர்ஸ்' வெற்றியாளரான தென் ஆப்ரிக்காவின் டெமி-லீக் நெல்-பீட்டர்ஸ். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!