அழகி மீது அன்பு மழை

அழகி மீது அன்பு மழை

1 mins read
c9ae515f-88b6-456e-a13f-53049c02f19c
-

சியேரா லியோன் அழகி மேரி எஸ்தர் பங்குராவை மக்கள் அன்பு மழையால் நனைத்துள்ளனர். மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் கலந்துகொள்ள தாமதாக வந்த காரணத்தால் அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை. ஆனால் ஏன் அவர் தாமதமாக வந்தார் என்பதற்கான விவரம் தெரிய வந்துள் ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள சியேரா லியோனிலிருந்து தாய்லாந்து வந்து சேர அவருக்கு இரண்டு வாரங்களானது. அவரது நாட்டிலிருந்து புறப்பட்ட அவர், நைஜிரியாவில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் தாய்லாந்து 'விசா' பெறுவதற்காக கானா வழியாக வந்தார். பின்னர் எத்தியோப்பியாவிலிருந்து அவர் பேங்காக் வந்து சேர்ந்தார். இதுபற்றி கேள்வி பட்ட தாய்லாந்து மக்கள் அவருக்கு பல்வேறு வழிகளில் ஆறுதல் கூறி வருகின்றனர்.