சோல்: அணுவாயுத வல்லமை கொண்ட வடகொரியா, அமெரிக்கா அண்மையில் விதித்த தடைகள் அணுவாயுதக் களை வுக்கான நோக்கத்தைக் கெடுத்துவிடும் என்று எச்சரித்தது. வடகொரியா மீது தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் அணுகு முறை கொரிய தீபகற்பத்தில் அணு வாயுதக்களைவுக்கான பாதையை மூடி விடும் என்று அது கூறியது. வடகொரியாவுக்கும் அமெரிக் காவுக்கும் இடையே நடைபெற்ற பல அடுக்கு பேச்சு வார்த்தைக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப் பூரில் சந்தித்தனர்.
அப்போது அணுவாயுதக் களைவுக் கான அறிக்கையில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். ஆனால் இன்று வரை அதற்கு அர்த்தம் தெரியவில்லை. அணுவாயுதக் களைவு நடவடிக்கைகளில் பெரிய அள வில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தமது நாட்டின் மீதான தடைகளை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் வடகொரியா, மேலும் தடைகள் விதிக்கப்படுவதால் அணு வாயுதக் களைவுக்கான பாதை மூடி விடும் என்று கூறியது.

