ரியாத்: ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அமெரிக்க ராணுவமும் ஆதரவு வழங்கி வருகிறது. ஆனால் சவூதி அரேபிய தூத ரகத்தில் செய்தியாளர் காஷோகி கொல்லப்பட்டதால் அதற்கு வழங்கப் பட்டு வரும் ஆதரவை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் சில செனட்டர்கள் கோரிக்கை விடுத்த னர். இந்தச் சூழ்நிலையில் ரியாத்துக்கு ராணுவ ஆதரவை நிறுத்தக் கோரும் தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய சவூதி அரேபியா, கடும் கண்டனம் தெரிவித்தது.
"அமெரிக்க செனட் சபை எடுத் துள்ள நிலைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டை எங்கள் மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. மேலும் இது, உள் நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதாகும்," என்று சவூதி வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. கடந்த வியாழக்கிழமை சவூதி அரேபியாவுக்கு எதிராக அமெரிக்க செனட் சபை வாக்களித்திருப்பது சவூதி அரேபியாவை வலுவாக ஆதரிக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் பின் னடைவை ஏற்படுத்தியுள்ளது.

