இரண்டாவது கனடியரைச் சந்திக்க சீனா அனுமதி

இரண்டாவது கனடியரைச் சந்திக்க சீனா அனுமதி

1 mins read
18a6e24f-3b30-46d4-b4aa-17f25712b547
-

ஒட்டாவா: கனடாவில் சீனாவின் கைத்தொலைபேசித் தயாரிப்பு நிறுவன மான ஹுவாவெய்யின் தலைமை நிதி அதிகாரியான மெங் வன்ஷோவ் கைது செய்யப்பட்டு பின்னர் பிணை யில் விடுவிக்கப்பட்டார். இதற்குப் பதிலடியாக சீனாவில் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கல் ஸ்பாவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். சீனாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் இரண் டாவது கனடியர் இவர். இந்த நிலையில் தொழிலதிபர் மைக்கல் ஸ்பாவரை கனடிய தூதர்கள் சந்திக்க சீனா அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்த விவரங்களை கனடிய வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித் தது. சீனாவுக்கான கனடாவின் தூதர் ஜான் மெக்கல்லம், மைக்கல் ஸ்பாவரைச் சந்தித்து பேசியுள்ளார் என்று அறிக்கை குறிப்பிட்டது. அமெரிக்கா கேட்டுக் கொண் டதற்கு இணங்க கனடாவில் சீனா வின் ஹுவாவெய் அதிகாரி கைது செய்யப்பட்டார். இதையடுத்து கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கல் ஸ்பாவரும் முன்னாள் தூதரான மைக்கல் கோவ்ரிக்கும் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டனர்.

சீனாவில் கைது செய்யப்பட்ட 2வது கனடியரான மைக்கல் ஸ்பாவர். படம்: ஏஎஃப்பி