பெட்டாலிங் ஜெயா: விசாரணையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கட்சி மாறாதீர்கள் என்று அம்னோ கட்சித் தலைவர்களையும் உறுப்பினர் களையும் டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார். "கட்சி மோசமான நிலையில் இருக்கும்போது கட்சிக்கு எது நல்லது என்பது பற்றி சிந்திக்காமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே சிலர் குறியாக இருக்கின்றனர். இது, கட்சி மீது அவர்கள் உறுதியாக இல்லை என்பதையே காட்டுகிறது," என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய திரு ஸாஹிட், உட்கட்சி பூசல் கட்சியை சீரழித்துவிடும் என்றார்.
கட்சி மாறாதீர்கள்: ஸாஹிட்
1 mins read

