கட்சிப் பதவிகளைத் துறந்தார் அன்வாரின் மகள் நூருல் இஸா

கட்சிப் பதவிகளைத் துறந்தார் அன்வாரின் மகள் நூருல் இஸா

1 mins read
3dd9ace5-a013-46db-a939-14728807849c
-

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் மகளான நூருல் இஸா (படம்), அக்கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந் தும் பினாங்கு பிகேஆர் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக, சீர்திருத்தப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார் 38 வயதான இஸா. "இந்த முடிவை நான் முன்பே எடுத்திருக்க வேண்டும். ஆனா லும் இந்த முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதாக இருக்க வில்லை," என்று இவர் சொன் னார். பிகேஆர் கட்சியின் சாதாரண உறுப்பினராகத் தாம் தொடரவிருப் பதாகவும் இவர் கூறினார். அதே வேளையில், கூட்டரசு அரசாங் கத்தின் எந்தப் பதவியிலும் இனி இருக்கப்போவது இல்லை என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக இவர் அறிவித்துள் ளார். மசோதாக்கள் குழுவின் தலைவர் பதவியை இவர் முன்னரே துறந்துவிட்டது குறிப் பிடத்தக்கது. 1998ஆம் ஆண்டு தமது அர சியல் பயணம் தொடங்கியதாகக் குறிப்பிட்ட இஸா, இதுநாள் வரை மக்கள் சேவையாற்ற வாய்ப்புத் தந்த கட்சித் தொண்டர்களுக்கு நன்றி கூறிக்கொண்டார்.