கோலாலம்பூர்: முன்னாள் மலேசிய அரசாங்கமும் 1எம்டிபி மாநில நிதியமும் கோல்ட்மென் சாக்ஸ் வங்கியிடம் பொய்த் தகவல் அளித்ததாக நேற்று வங்கி குற்றம் சாட்டியது. 1எம்டிபி விவகாரத்தின் தொடர்பில் கோல்ட்மென் சாக்ஸ் எனும் அமெரிக்க வங்கிக்கு எதிராகவும் அதன் இரு முன்னாள் ஊழியர்களுக்கு எதிராகவும் மலேசியாவின் அரசாங்கம் நேற்று முன்தினம் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து கோல்மென் இவ்வாறு கூறியுள்ளது. கோல்ட்மென் வங்கியும் அதன் இரு முன்னாள் ஊழியர்களும் ஒரு மலேசிய நிதியாளருடன் கூட்டிணைந்து 2.7 பில்லியன் அமெரிக்க டாலரை கையாடியதுடன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் போலி வாக்குமூலம் அளித்தும் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் இதை மறுத்துள்ள வங்கி, முன்னாள் மலேசிய அரசாங்கத்தையும் 1எம்டிபியையும் சேர்ந்த சிலர் இப்பரிவர்த்தனைகள் தொடர்பில் பொய்த் தகவல் கூறியிருந்ததாகவும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எழுத்துபூர்வ உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டதாகவும் வங்கி கூறியுள்ளது.
கோல்ட்மென்: முன்னாள் மலேசிய அரசாங்கம் கூறுவது பொய்
1 mins read

