பெட்டாலிங் ஜெயா: பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் மகள் நூருல் இஸா, கட்சி யின் உதவித் தலைவர் பதவியிலிருந்தும் பினாங்கு பிகேஆர் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கூறியுள்ளார். அறிவிப்பு குறித்துப் பலர் தங்களின் அதிர்ச் சியைத் தெரிவித்துள்ள வேளையில் சிலர் இதைப் போலித் தகவல் என்றும் சிலர் இது திட்டமிடப் பட்டது என்றும் கூறுகின்றனர். கட்சி உறுப்பினர் களின் கோரிக்கைகளுக்கு இணங்கி நூருல் இஸா தம் பதவி விலகல் தொடர்பிலான அறிவிப்பை மீட்டுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் நூருல் இஸாவின் பிடிவாத குணத்தைப் பற்றி அறிந்தவர்கள், அவர் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கமாட்டார் என்பதையும் அறிந்திருப்பார்கள். பதவி விலகும் முடிவு பற்றி தம் பெற்றோருக்குத் தெரியும் என்றும் இம்முடிவு பலநாட்கள் நன்கு யோசித்த பின்னர் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். பிரதமர் பதவி ஏற்கவிருக்கும் நூருல் இஸாவின் தந்தை அன்வார் இப்ராஹிம், தாயாரான துணைப் பிரதமர் வான் அஸிஸா, மேலும் சில குடும்ப உறுப்பினர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு குடும்பமாக உல்லாசப் பயணம் சென்றிருக்கிறார் கள்.
பதவி விலகுவது தொடர்பிலான அதிகாரத்துவ தகவலை வெளியிட்ட பின் நூருல் இஸாவும் தம் குடும்பத்தாரை பிலிப்பீன்சில் சந்திக்கப் பயண ஏற்பாடுகள் செய்வதில் தீவிரமானார். நூருல் இஸா பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக சீர்திருத்தப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார் என்று கூறியுள்ளார். அத்துடன் பிகேஆர் கட்சியின் சாதாரண உறுப்பினராகத் தாம் தொடரவிருப்பதாகவும் சொன்னார்.

