பெய்ஜிங்: சீனா, 3வது கனடியர் ஒருவரை தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் ஹுவாவெய் நிர்வாகி மெங் வன்ஷோவ் கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாக கனடியர்களை சீனா அடுத்தடுத்து கைது செய்து வருகிறது. இதற்கு முன்பு இரண்டு கனடியர்களை சீனா தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இதுவரை இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்படவில்லை. ஆனால் கனடாவில் கைது செய்யப்பட்ட ஹுவாவெய் அதிகாரி மெங் வன்ஷோவ் பிணையில் விடுவிக்கப்பட்டுள் ளார். கனடாவின் நேஷனல் போஸ்ட், 3வது கனடியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
சீனாவில் 3வது கனடியர் தடுத்துவைப்பு
1 mins read

