எதிர்க்கட்சி பிரமுகருடன் நூருல் இஸா திடீர் சந்திப்பு

1 mins read
84651ae0-b7d2-470b-bc86-78369c5d9a25
-

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பிரதமராக பொறுப்பு ஏற்கவிருக்கும் அன்வார் இப்ராஹிமின் 38 வயது மகளான நூருல் இஸாவும் அம்னோவின் முன்னாள் இளையர் பிரிவு தலைவரான கைரி ஜமாலு தீனும் ஒரு உணவகத்தில் சந்தித் துப் பேசிய படம் ஊடகங்களில் வெளியானதால் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் நூருல் இஸாவின் கெஅடிலான் ரக்யாட் கட்சியைச் சேர்ந்த ரஃபிஸி ரம்லியும் பங்கேற்றுள்ளார்.

பங்சாரில் உள்ள ஒரு உணவகத்தில் மூவரும் சந்தித்துப் பேசினர் என்று 'த ஸ்டார்' இணைய ஏடு குறிப்பிட்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர், உணவகம் ஒன்றில் எதிர்க்கட்சி பிரமுகரைச் சந்தித் திருப்பது மலேசிய அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவ்வாரம் முற்பகுதியில் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் மூத்த உதவித் தலைவர் பதவியி லிருந்து விலகுவதாக நூருல் இஸா அறிவித்தார். இதனால் கட்சியைச் சேர்ந்த பலர் அதிர்ச்சி யடைந்தனர்.

அம்னோவின் முன்னாள் இளையர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுதீனுடன் நூருல் இஸா, ரஃபிஸி ரம்லி. ஒரு உணவகத்தில் மூவரும் சந்தித்துப் பேசினர். இஸ்டாகிராம்/ கைரி