டிரம்ப் குழு பரிந்துரை: பள்ளிகளில் துப்பாக்கி

டிரம்ப் குழு பரிந்துரை: பள்ளிகளில் துப்பாக்கி

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடைபெறுவதால் அது பற்றி ஆராய பாதுகாப்புக் குழு ஒன்றை அதிபர் டோனல்ட் டிரம்ப் அமைத் தார். அக்குழு, பள்ளிகளின் பாது காப்புக்கு துப்பாக்கிகளைப் பயன் படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களை பாதுகாவலராகப் பயன்படுத்தலாம் என்றும் அது கூறியுள்ளது. கடந்த பிப்ரவரியில் புளோரி டாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதால் கல்வி அமைச்சர் பெட்ஸி டெவோஸ் தலைமையில் மத்திய பள்ளி பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. புளோரிடா சம்பவத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் 17 பேரை சுட்டுக்கொன்றார். இதனால் நாடு முழுவதும் துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.