டிரம்ப் அறநிறுவனம் மூடப்படும்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சர்ச்சைக் குரிய அறநிறுவனம் கலைக்கப் படுகிறது. திரு டிரம்ப்பும் அவரது மூன்று பிள்ளைகளும் அரசியல் ஆதாயங் களுக்காக அறநிறுவனத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அறநிறுவனத்தை கலைக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டார். இந்த விவரங்களை நியூயார்க் மாநில தலைமைச் சட்ட அதிகாரி பார்பரா அண்டர்வுட் வெளியிட்டார். அறநிறுவனத்தின் எஞ்சிய பணத்தை விநியோகிக்கும் பணியை பார்பரா ஏற்றுள்ளார். திரு டிரம்ப்பும் அவரது மூன்று பிள்ளைகளும் அரசியல் ஆதாயங் களுக்காக அறநிறுவனத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் முன்னதாக குற்றம் சாட்டி யிருந்தார்.

இருந்தாலும் திரு டிரம்ப், அவரது பிள்ளைகள் டோனல்ட் ஜூனியர், இவாங்கா, எரிக் ஆகி யோருக்கு எதிரான வழக்கு விசார ணை தொடர்ந்து நடைபெறும் என்று தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் அறநிறுவனத்தின் வழக்கறிஞர், தலைமைச் சட்ட அதிகாரி அறநிறுவன விவ காரத்தை அரசியலாக்க முயற்சி செய்கிறார் என்று கூறினார். அதிபர் டிரம்ப்பையும் அவரது குடும்பத்தையும் சுற்றியுள்ள பல் வேறு வழக்குகளில் அறநிறுவன விவகாரமும் ஒன்று. டிரம்ப்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.