திபெத் குறித்த அமெரிக்காவின் புதிய சட்டத்திற்கு சீனா கடுமையான எதிர்ப்பு

திபெத் குறித்த அமெரிக்காவின் புதிய சட்டத்திற்கு சீனா கடுமையான எதிர்ப்பு

1 mins read

பெய்ஜிங்: திபெத் குறித்து அமெரிக்கா அறிமுகம் செய்துள்ள புதிய சட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. திபெத் தனது உள்நாட்டு விவகாரம் என்றும் இதில் வெளிநாடுகளின் தலையீட்டைத் தான் அனுமதிக்க முடியாது என்றும் சீனா கூறியது. திபெத்துக்குள் செல்ல முற்படும் அமெரிக்க தூதர்கள், செய்தியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரைக் கட்டுப்படுத்தும் சீன அதிகாரிகளை அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்ய இந்த புதிய சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று முன்தினம் உறுதி செய்தார். இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.