ரஷ்யா மீது புதிய வர்த்தகத் தடைகளை விதிக்கும் அமெரிக்கா

ரஷ்யா மீது புதிய வர்த்தகத் தடைகளை விதிக்கும் அமெரிக்கா

1 mins read

வா‌ஷிங்டன்: ரஷ்யா மீது கூடுதலான வர்த்தகத் தடைகளை அமெரிக்கா நேற்று அறிமுகம் செய்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குளறுபடி விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனிநபர்களைக் கொண்டுள்ள பட்டியலில் அமெரிக்கா மேலும் சிலரைச் சேர்த்துள்ளது. இந்நபர்கள் ரஷ்ய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், 'ருசால்' என்ற ரஷ்ய அலுமினிய நிறுவனமும் ஒலேக் டெரிபக்சா என்ற ரஷ்ய பெருஞ்செல்வந்தருடன் தொடர்பான இரண்டு நிறுவனங்களும் மீதான வர்த்தகத் தடைகள் அகற்றப்பட்டதாகவும் அமெரிக்க நிதியமைச்சு தெரிவித்தது. இருந்தபோதும் டெரிபக்சா மீதுள்ள வர்த்தகத் தடைகள் தொடரும் என்று அமைச்சு கூறியது.