இந்தோனீசியாவில் கடுமையாகும் பயங்கரவாத சட்டங்கள்

இந்தோனீசியாவில் கடுமையாகும் பயங்கரவாத சட்டங்கள்

1 mins read

ஜகார்த்தா: கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கான பண்டிகைகளை முன்னிட்டு இந்தோனீசியா தனது பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்தி வருகிறது. பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போலிஸ் தலைவர் டிட்டோ கர்னவியன் தெரிவித்தி ருக்கிறார். மே மாதத்தில் திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பேரில் இந்த கைதுகள் முன்னெச் சரிக்கையாகச் செய்யப்பட்டதாக கர்னவியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சுரபாயா நகரில் ஐ,எஸ் அமைப்பினர் நடத்திய தற் கொலைத் தாக்குதலில் 30 பேருக்கு அதிகமானோர் உயிரிழந் ததை அடுத்து இந்தச் சட்டத் திருத்தம் நடப்புக்கு வந்தது.