இலங்கை அமைச்சரவை நியமனம்

1 mins read

கொழும்பு: இலங்கை அமைச்சரவையின் 30 உறுப் பினர்களுக்கான பதவிப் பிர மாணம் நேற்று நடைபெற்றது. அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் பிரதமராக உறுதி செய்யப்பட்ட பிறகு இது நடந்தது. ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசாங்கம் செயலிழப்பதைத் தடுக்க தற்காலிக செலவினத் திட்டம் குறித்து நாடாளுமன்றம் விவாதித்து வரும் வேளையில் மங்கள சமரவீர மீண்டும் நிதி அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அக்டோபரில் அதிபர் சிறிசேன, திரு விக்ரமசிங் கேயை பிரதமர் பதவியி லிருந்து நீக்கி நாடாளு மன்றத்தின் ஒப்புதல் இன்றி மகிந்த ராஜபக்சேவைப் பிரதமராக நியமித்ததால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இது சட்டவிரோதச் செயல் என அறிவித்த இலங்கை நீதிமன்றம், விக்ரமசிங்கே பதவியில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. சட்ட ஒழுங்கு அமைச்சு திரு சிறிசேனவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.