சீனா: கனடிய பெண் சட்ட -விரோதமாக வேலை செய்தார்

சீனா: கனடிய பெண் சட்ட -விரோதமாக வேலை செய்தார்

1 mins read

பெய்ஜிங்: கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீனாவில் சட்ட விரோதமாக வேலை செய்த தற்காக தண்டிக்கப்படுவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. சீனாவில் ஆங்கிலம் கற்பித்து வந்த இந்தப் பெண், சீனாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்றாவது கனடியர் என்று கனடிய அரசாங்கம் தெரிவித் ததை அடுத்து சீனா இவ்வாறு கூறியுள்ளது. கனடாவைச் சேர்ந்த முன் னைய தூதர் மைக்கல் கொவ்ரிக் கையும் வர்த்தகத் தலைவர் மைக்கல் ஸ்பாவரையும் சீன அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாக செயல் படுவதாகச் சந்தேகிக்கப்படு கின்றனர் என சீனா தெரிவித்தது. சீன தொழில்நுட்பப் பெரு நிறுவனமான ஹுவாவெயின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சாவ் டிசம்பர் 1ஆம் தேதி கனடாவில் கைது செய்யப்பட் டதை அடுத்து சீனாவில் இந்த மூன்று கனடியர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.