புத்ராஜெயா: மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, தமது ப்ரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியில் சேர முன்வரும் முன்னைய அம்னோ நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கவனமாக ஆராயப்படுவர் என தெரிவித்திருக்கிறார். தமது கட்சியின் பெரும்பான்மையை அதி கரிப்பதற்காக முன்னைய அம்னோ உறுப்பினர்கள் பலர் சேர்க்கப்பட வில்லை என்றும் எதிர்க்கட்சி வலுவாக இருக்க தாம் விரும்பு வதாகவும் அவர் கூறினார். பெர்சாத்து கட்சிக்கும் ஆளுங் கூட்டணியான பக்கத்தான் ஹரப் பான் கட்சிக்கும் தலைமை வகிக்கும் டாக்டர் மகாதீர், தமது கட்சியில் முன்னைய அம்னோ கட்சியினர் சேருவது அவ்வளவு எளிதல்ல என்று கூறினார்.
பெர்சாத்து கட்சிக்கு பொருத்த மானவர்களா என்பதைக் கணிக்க அவர்கள் நடந்துகொள்ளும் விதம் நன்கு ஆராயப்படும் என்றார் அவர். "குற்றச்சாட்டுகள் இல்லாத தலைவர்களையும் நஜிப்புக்கு ஆதரவு தராதவர்களையும் மட்டும் நாம் சேர்ப்போம்," என்று டாக்டர் மகாதீர் கூறினார். மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி நிறு வனம் தொடர்பான ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைத் தற்போது எதிர்நோக்குகிறார். "முன்னைய அம்னோ உறுப்பி னர்களில் சிலர் பக்கத்தான் ஹரப்பானையும் என்னையும் புண்படும் சொற்களால் குறை கூறியுள்ளனர். இவர்களை எங் களால் ஏற்க முடியாது," என்று டாக்டர் மகாதீர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

