வாஷிங்டன்: மேற்கத்திய நாடு களில் உள்ள அரசாங்க, தனியார் நிறுவனங்களின் கணினி கட் டமைப்புகளில் ஊடுருவி தகவல் களைத் திருடுவதாக இரு சீன ஆடவர்கள் மீது அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த இருவரும் 'அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டெண்ட் திரட் 10' எனும் ஊடுருவல் குழுவைச் சேர்ந்த வர்கள் என்றும் சீனாவின் பிரதான உளவுத் துறையால் இவர்கள் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்றும் அமெரிக்க நீதித்துறை கூறியுள் ளது. சீன தற்காப்பு அமைச்சுடன் சேர்ந்து ஷு ஹுவாவும் ஷாங் ஷிலோங்கும் 'ஹுவாயிங் ஹைய் டாய்' என்ற நிறு வனத்தில் பணியாற்றி வரு கின்றனர் என்று அமெரிக்க நீதித்துறை யின் ஆவணங்கள் குறிப்பிடு கின்றன.
2006ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையில் அறிவுசார் சொத்துகளையும் வர்த்தக ரகசியங்களையும் தொழில்நுட்பத் தகவல் களையும் திருடும் நோக்கத்தி லேயே இருவரும் செயல் பட்டுள்ளனர் என்று மத்திய புலனாய்வுப் பிரிவும் குற்றம் சாட்டியுள்ளது.

