வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரி ஜிம் மேட்டிஸ் பதவி விலகினார்

வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரி ஜிம் மேட்டிஸ் பதவி விலகினார்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வெள்ளை மாளிகையில் பணி யாற்றி வந்த மற்றொரு முக்கிய அதிகாரி பதவி விலகியிருக் கிறார். தற்காப்பு அமைச்சர் ஜெனரல் ஜிம் மேட்டிஸ் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்பித்துள் ளார். இதற்கு உடனே டுவிட்டர் மூலம் பதிலளித்த அதிபர் டிரம்ப், வரும் பிப்ரவரி மாதத்தில் ஜெனரல் ஜிம் மேட்டிஸ் தனிச்சிறப்புடன் ஓய்வு பெறுவார் என்று கூறியுள் ளார். சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் மீட்டுக்கொள்ளப்படும் என்று திரு டிரம்ப் அறிவித்த மறுநாளே ஜிம் மேட்டிஸ் தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஜெனரல் மேட்டிஸ் தமது கடி தத்தில் திரு டிரம்ப்புடன் கொள்கை களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணுவத் தளபதியையும் அவர் மறைமுகமாக குறைகூறியுள் ளார். சிரியாவில் அமெரிக்க துருப்புகள் தொடர்ந்து இருப்பதற் காக டிரம்பை சம்மதிக்கும் நோக் கத்தில் கடைசி முயற்சியாக ஜிம் மேட்டிஸ் வெள்ளை மாளிகை சென்றார் என சில அதிகாரிகள் கூறினர். ஆனால் அவரது யோசனை உடனே நிராகரிக்கப்பட்டது. சில மணி நேரங்களில் மேட்டி சின் பதவி விலகல் கடிதம் வெளியிடப்பட்டது.