ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்பவுள்ள 7,000 வீரர்கள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்பவுள்ள 7,000 வீரர்கள்

1 mins read

வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 7,000 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டுக்கொள்ளப்படுவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள அமெரிக்க வீரர்களில் பாதிப்பேர் ஒரு சில மாதங்களில் அமெரிக்கா திரும்புவர் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவிலிருந்து அமெரிக்க வீரர்கள் மீட்டுக்கொள்ளப்படுவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த மறுநாள் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க வீரர்களை அங்கிருந்து மீட்டுக்கொள்வதால் போராளிகளின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.