ஆளில்லா வானூர்திகள் பறந்ததால் பயணிகள் பாதிப்பு; இருவர் கைது

ஆளில்லா வானூர்திகள் பறந்ததால் பயணிகள் பாதிப்பு; இருவர் கைது

1 mins read

லண்டன்: லண்டனில் கேட்விக் விமான நிலைய ஓடுபாதைக்கு அருகே திடீரென்று ஆளில்லா வானூர்திகள் பறந்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் புதன்கிழமை அவதியுற நேர்ந்தது. ஆளில்லா வானூர்திகளின் இடையூறு தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஓர் ஆடவரிடமும் ஒரு பெண்ணிடமும் அது தொடர்பில் விசாரணை செய்து வருவதாக போலிசார் கூறியுள்ளனர். ஆளில்லா வானூர்திகளின் இடையூறு காரணமாக சுமார் 1,000 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது திசை திருப்பிவிடப்பட்டன என்றும் இதனால் 140,000 பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறினர். கேட்விக் விமான நிலையம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டதாகவும் அனைத்து விமானச் சேவைகளும் வழக்கநிலைக்கு திரும்பியதாகவும் அதிகாரிகள் கூறினர்.