மொரோக்கோவில் சுற்றுலாப் பயணிகள் இருவர் கொலை; ஒன்பது பேர் கைது

மொரோக்கோவில் சுற்றுலாப் பயணிகள் இருவர் கொலை; ஒன்பது பேர் கைது

1 mins read

ஓஸ்லோ: மொரோக்கோவில் சுற்றுலாப் பயணிகள் இருவர் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் இருவரை அந்நாட்டுப் போலிசார் கைது செய்துள்ளனர். ஸ்காண்டிநேவியாவைச் சேர்ந்த இரு பெண்கள் மொரோக்குவுக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தபோது கொலை செய்யப்பட்டனர். அவ்விரு பெண்களின் சடலங்களை போலிசார் இம்மாதம் 17ஆம் தேதி மலைப்பகுதியில் கண்டுபிடித்தனர். அவ்விருவரும் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தெரிந்ததாக போலிசார் கூறினர். அக்கொலை தொடர்பில் ஏற்கெனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ் போராளிகள் அந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.