கோலாலம்பூர்: மலேசியாவில் தேசிய பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் ஒட்டுமொத்தமாக திருத்தியமைக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். முதுநிலை பாடத்திட்டத்திற்கு மாணவர்களை தயார்படுத்து வதற்குப் பதிலாக தற்போது இஸ்லாமிய பாடத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கப்பட்டு வருவதாக டாக்டர் மகாதீர் கூறினார். மாணவர்கள் ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வருங்காலத்தில் அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக் கும் என்று அவர் சொன்னார். "மாணவர்கள் இஸ்லாம் சமயம் பற்றி நன்கு கற்றுக்கொள்கிறார் கள். மற்றபடி அவர்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை," என்று டாக்டர் மகாதீர் விருந்து நிகழ்ச்சி யில் கலந்துகொண்டபோது கூறி னார். பள்ளித் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற்றாலும் பிற்காலத்தில் அவர்களுக்கு வேலை கிடைப் பதற்கு உதவும் பாடங்களைப் பற்றி அவர்களால் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஆனால் அவர்கள் நல்ல முஸ்லிம் சமய குருக்களாக உள்ளனர் என்றும் திரு மகாதீர் குறிப்பிட்டார்.
மகாதீர்: பள்ளிக்கூட பாடத்திட்டங்கள் முழுமையாக திருத்தியமைக்கப்படும்
1 mins read

