சிரியாவில் ஐஎஸ் போராளிகளை எதிர்த்து துருக்கி சண்டையிடும்

சிரியாவில் ஐஎஸ் போராளிகளை எதிர்த்து துருக்கி சண்டையிடும்

1 mins read

இஸ்தான்புல்: சிரியாவில் ஐஎஸ் போராளிகளை எதிர்த்து சண்டை யிட்டு வந்த கூட்டணிப் படை யிலிருந்து அமெரிக்கா விலகி யதைத் தொடர்ந்து ஐஎஸ் போராளி களை எதிர்த்து சண்டையிட துருக்கி முன் வந்துள்ளது. துருக்கி நாட்டு அதிபர் தாயிப் எர்டோகன் இதுபற்றி அறிவித்தார். சிரியாவிலிருந்து 2,000 அமெரிக்க வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்த வாரம் அறிவித்தார். திரு டிரம்ப்பின் இந்த திடீர் அறிவிப்பால் பல நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. சிரியாவில் பல ஆண்டுகளாக நீடிக்கும் சண்டைக்கு அரசியல் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை திரு டிரம்ப்பின் அந்த முடிவு சீர்குலையச் செய் துள்ளதாக அவரது செயலை குறை கூறுபவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சிரியாவில் அரசாங்கப் படைகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் ஐஎஸ் போராளிகளை எதிர்த்து துருக்கி நாட்டுப் படை சண்டையிடும் என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.