காட்மாண்டு: நேப்பாளத்தில் ஒரு பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் அந்த பேருந்தில் சென்ற 23 பேர் உயிரிழந்தனர் என்றும் மேலும் 14 பேர் காயமடைந்தனர் என்றும் போலிசார் கூறினர். ஒரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் தாவரவியல் பூங்கா ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்ததாகவும் அவர்கள் திரும்பும் வழியில் விபத்து நிகழ்ந்ததாகவும் போலிஸ் வட்டாரங்கள் கூறின. அவர்கள் பயணம் செய்த பேருந்து டாங் மாவட்டத்தில் டுல்சிபுர் நகருக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையை விட்டு விலகி 700 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்ததாகவும் வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்த தாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நேப்பாளத்தில் கல்லூரி மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து மலைச்சரிவுப் பாதையில் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படம்: ஏஎஃப்பி

