இசைக் கச்சேரி மேடையை வாரிச் சுருட்டிய பேரலை

இசைக் கச்சேரி மேடையை வாரிச் சுருட்டிய பேரலை

1 mins read
f67647f5-c42e-4413-8c6c-59c7e51d4095
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவை நிலைகுலையச் செய்த சுனாமி பேரலை இசை மேடை ஒன்றை வாரிச்சுருட்டியது தொலைக்காட்சி யில் காட்டப்பட்டது. அதைப் பார்த் தவர்கள் மனம் பதைபதைத்தனர். மேடையைச் சுருட்டிய ஆக் ரோஷ அலை அந்த மேடையில் இசைக் கச்சேரி நடத்திக்கொண் டிருந்த உள்ளூர் குழுவினரைத் தலைக்குப்புறத் தள்ளியது. பிஎல்என் என்னும் அரசாங்கப் பயனீட்டு நிறுவனம் பந்தேன் மாநி லத்தில் ஆண்டிறுதிக் கொண்டாட் டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இசைக் கச்சேரியைக் காண அந் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 250 ஊழியர்கள் தஞ்சோங் லெசுங் கடற்கரையில் திரண்டிருந்தனர். அப்போது திடீரென்று கடலில் எழுந்த பேரலை அந்தப் பகுதி முழுவதையும் விழுங்குவதுபோல விஸ்வரூபம் எடுத்து வந்தது.

அலை வாரிச் சுருட்டியதில் சிக்கியவர்கள் உயிரிழந்தனர். குறைந்தது ஏழு பேர் வரை மாண் டதாகவும் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் நிகழ்ச்சியை ஏற் பாடு செய்த நிறுவனத்தின் பேச் சாளர் தெரிவித்தார். 'பேண்ட் செவன்டீன்' இசைக் குழுவின் கச்சேரி நடந்துகொண் டிருந்தபோது திடீரென்று மேடை சரிவதும் அதிலிருந்தவர்கள் கீழே விழுவதும் காணொளி வடிவில் 'மெட்ரோ டிவி' தொலைக்காட்சி யில் ஒளிபரப்பப்பட்டது.

பந்தேன் மாநிலம் பந்தேகிளாங் பகுதியில் சுண்டா நீரிணைக்கு அருகில் சுனாமி கோர தாண்டவம் ஆடியதில் உருக்குலைந்த பகுதி. படம்: இபிஏ