பிலிப்பீன்ஸ்: கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை

பிலிப்பீன்ஸ்: கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை

1 mins read

மணிலா: பிலிப்பீன்சின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று முன்தினம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்திருக்கின்றனர். பிலிப்பீன்சின் மத்திய பகுதியிலுள்ள டரங்கா நகரில் திரு ரோடல் பட்டோகாப், சுற்றியுள்ள மக்களுக்கு அன்பளிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் ஒளிந்துகொண்டிருந்த துப்பாக்கிக்காரன் திடீரென அவரையும் அவரது பாதுகாவலரையும் சுட்டுக்கொன்றான். கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் இது அரசியல் காரணங்களுக்காகச் செய்யப் பட்டதா என்பது குறித்து ஆராயப்படும் என்று போலிசார் தெரிவித்தனர். அடுத்தாண்டு மே மாதத்தில் டரங்கா நகரின் மேயர் பதவிக்குத் திரு பட்டோகாப் போட்டியிடவிருந்தார்.